புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் உணவு பொருள் மற்றும் பணம் வழங்கல்

15 September 2020, 4:28 pm
Quick Share

புதுச்சேரி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக உணவு பொருள் மற்றும் பணம் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்றுமுதல் வழங்கப்பட்டு வருகின்றது.

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜூன் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாமல் கூடபத்துள்ளது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக உணவு தானியங்கள் மற்றும் சமைப்பதற்குண்டான செலவினங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளில் உணவு தானியங்கள் மற்றும் பணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி இந்த உணவு படியானது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதனை அந்தந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்து உணவு பங்கீட்டு அட்டை, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்று சென்றனர்.