கொரோனா தடுப்புப்பணியில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கல்…

7 August 2020, 10:51 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணியில் பணியாற்றி உயிரிழந்த 2 அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு காலங்களில் கொரோனா தடுப்புப் பணியில் பணியாற்றிய மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர் எவராவது முன்களத்தில் பணியாற்றி மரணமடைய நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்கு காலங்களில் பணிபுரிந்து கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளாகி மரணமடைந்த ஸ்ரீபெரும்புத்தூர் வட்டம் ஒரகடமகாதேவிமங்களம் கிராமம், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த இராஜாராம் என்பவருக்கும், பாலுச்செட்டி சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்த எம்.பழனி என்பவருக்கும் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலமாக பெறும் பொருட்டு இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தே.சண்முகப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0