49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

17 October 2020, 7:25 pm
Quick Share

புதுச்சேரி: அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதுச்சேரி மாநில அதிமுக தலைமை கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதிமுகாவின் 49ஆம் ஆண்டு துவக்க விழா இன்று புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. உப்பளம் பகுதியில் உள்ள தலைமை கழகத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனிடையே புதுச்சேரியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

Views: - 13

0

0