தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.. ஆலோசனை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் தகவல் .!

27 February 2021, 9:37 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் காவல்துறை மண்டல அலுவலர்கள் ,பறக்கும் படை கண்காணிப்பு படையினர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார் .

தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது; கன்னியாகுமரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் சேர்த்து ஒரு பாராளுமன்ற தொகுதி உள்ளது .மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆண் வாக்காளர்கள் ,7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பெண் வாக்காளர்களும், 603 இதர் வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 6 தொகுதிகளிலும் சேர்த்து புதிதாக 54 ஆயிரத்து 518 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் .தேர்தலை எதிர்கொள்ள மாவட்டத்தில் 2243 வாக்கு மையங்கள் உள்ளது. இந்த மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 20 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 6 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து 137 மண்டல அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 18 குழுக்களும் ,

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு 3 கண்காணிப்பு படை குழுக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு 18 குழுக்களும் ,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வீடியோ குழு வீதம் 6 சட்டமன்ற தொகுதியில் ஆறு குழுக்களும் , ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு அக்கவுண்டிங் குழுக்கள் வீதம் ஆறு சட்டமன்ற தொகுதியில் ஆறு குழுக்களும் ,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு வீடியோ சர்வேலைன்ஸ் குழுக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு 6 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெற்று விழாக்கள் நடத்த வேண்டும். பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் எந்தவித பிளக்ஸ் மற்றும் பேனர் வைக்க கூடாது. தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார்கள் 19 50 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் .

அதேபோல் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் cVIGILசெயலியை பயன்படுத்தி விதிமீறல்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடலாம். இந்த செயலி மூலம் ஒருவர் எத்தனை புகார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்யும் வாக்காளர்களின் சுய தகவல்களை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். என அவர் தெரிவித்தார் .கூட்டத்தில் தேர்தல் பொறுப்பு அலுவலரும் , மாவட்ட வருவாய் அலுவலருமான ரேவதி பத்மநாபபுரம் ,பத்மநாபபுரம் சார்ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி , நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் உட்பட அரசு அலுவலகங்கள் பலர் பங்கேற்றனர்.

Views: - 2

0

0