8 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம்: நேரடியாக பெற்ற மனுக்களை ஆட்சியர்

Author: kavin kumar
4 October 2021, 6:53 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் 8 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மனுக்களை நேரடியாக பெற்றார்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேரடியாக மனுக்கள் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியர்‌ அலுவலக வாயிலில் உள்ள புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.இந்த நிலையில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமானது நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து 8மாதங்களுக்கு பிறகு திங்கட்கிழமையான இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தங்கள் கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசுவிடம் வழங்கினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வழங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Views: - 178

0

0