பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி ஆணையாளர்
Author: kavin kumar12 October 2021, 4:53 pm
மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக மனுக்களை பெற்றார்.
மதுரை மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.கொரானா வைரஸ் தொற்று காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநகராட்சி சார்பில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரானா வைரஸ் தொற்று குறைவால் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் நான்கு மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை, தெரு விளக்கு, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் நேரடியாக பெற்றார்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாகப் பதிவுசெய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.இம்முகாமில் உதவி ஆணையாளர், செயற் பொறியாளர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0
0