கழிவறை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…

Author: Udhayakumar Raman
30 November 2021, 3:46 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே கழிவறை வசதி கோரி மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி ஆரியமங்கலம் 7வது வார்டு வடக்கு கடை காயிதே மில்லத் நகர் மற்றும் மலை அடிவாரம் பகுதியில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி செய்து தந்ததில்லை குறிப்பாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும் இங்கு நம்ம டாய்லெட் சமயத்தில் அமைக்கப்பட்டது அதுவும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் விஷ பாம்புகள் விஷ பூச்சிகள் தொல்லை நாளுக்கு அதிகரித்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்தும், இந்நாள் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநகராட்சியை கண்டித்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பிச்சை எடுக்கும் போராட்டம் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் தாங்கினார். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் அடுத்த வாரம் திருச்சி மாவட்ட ஆட்சியாளர்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள பாம்புகள் விஷப் பூச்சிகளை பிடித்து ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Views: - 122

0

0