குடிநீர் விநியோகிக்கத் கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

2 March 2021, 1:39 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டிஅருகே கடந்த இரு வாரமாக முறையாக குடிநீர் வினியோகிக்காததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையில் முட்செடிகளை வெட்டிபோட்டு தடுப்புகள் அமைத்து காலிகுடங்களுடன் அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஏடூர் ஊராட்சியில் உள்ள கும்புளி கிராமத்தில் கடந்த இரண்டு வார காலமாக முறையாக குடிநீர் வழங்காததால் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையில் முட்செடிகளை வெட்டிப்போட்டு தடுப்பு அமைத்து
காலி குடங்களை வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவ்வழியாகச் சென்ற மாதர்பாக்கம் செங்குன்றம் வழித்தட அரசு பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் ஊராட்சி நிர்வாகத்தினர்
அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு, குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக எளாவூர் ஏடூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Views: - 0

0

0