அரசு ஊழியரை கொலை செய்த நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
7 September 2020, 11:06 pmபுதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியரை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த அரசு ஊழியர் கணேசன் இன்று மாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய முத்தியால்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும் கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் கணேசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி வீதி- அண்ணாசாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமிநாராயாணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அவர்களை அங்கிருந்து கலைந்து போக வைத்தனர்.
0
0