தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

Author: Udhayakumar Raman
30 November 2021, 3:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்தது 100 க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.மேலும் அங்குவந்த சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை காரணமாக இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் அங்கு வசிக்கக்கூடிய மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகுயுள்ளனர். இந்நிலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்தும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும், அப்பகுதி மக்கள் மகாத்மா காந்தி வீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Views: - 165

0

0