பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தர்ணா போராட்டம்

7 September 2020, 6:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் செய்த வேலைக்கான நிலுவைத் தொகை 100 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித் துறை அலுவலகம் வாயலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் செய்த வேலைக்கான நிலுவைத் தொகை 100 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இறுதி பில்லுக்கு 90% எஸ்.டி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென அலுவலகம் வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்..

மேலும் ஆளுநர், முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் நிலுவை தொகை வழங்க கோரி மனு கொடுத்தும் இதுவரை நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக நிலுவை தொகை வழங்கப்படவில்ல என்றால் அடுத்தக்கட்டமாக அனைவரும் ஒன்று திரண்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 1

0

0