வீட்டில் பட்டாசுகள் வெடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு: உறவினர்களுக்கு நாராயணசாமி ஆறுதல்

29 September 2020, 3:17 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டாசு தயாரித்தபோது பட்டாசு வெடித்து வீடு தரைமட்டமானதில் கணவன், மனைவி பலியா சம்பவ இடத்தில் முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்

புதுச்சேரி அரியாங்குப்பம் அர்தோனியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (43). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நெப்போலியன் தனது வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களையும் தனது வீட்டில் மூட்டை மூட்டையாக சேமித்து வைத்திருந்துள்ளார். இதனிடையே நேற்று மாலை நெப்போலியன் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டமானது.

இதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற போது நெப்போலியனின் இரண்டு மகள்களும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை முதல்வர் நாராயணசாமி இன்று காலை ஆய்வு செய்தார் விபத்து குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தாய், தந்தையை இழந்த இரண்டு மகள்களுக்கும் நாராயணசாமி ஆறுதல் கூறினார். மேலும் இது போன்று அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் குறித்து விசாரணை செய்ய காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Views: - 6

0

0