புதுச்சேரி அதிமுக சார்பில் நடைபெற்ற உரிமை குரல் முழக்க போராட்டம்

Author: Udhayakumar Raman
28 July 2021, 1:53 pm
Quick Share

புதுச்சேரி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக திமுக அரசை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் நடைபெற்க உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது நீட்தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிக்கு உதவித்தொகை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வாக்குறுதி அளித்த திமுக தற்போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து மாணவர்களை ஏமாற்றி வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வரும் திமுக அரசை கண்டித்தும் புதுச்சேரி அதிமுக சார்பில் உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாநில செயலாளருமான அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதேபோல் மேற்கு மாநில அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாநில செயலாளருமான ஓம்சக்திசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Views: - 418

0

0