திருவாரூருக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி ‘சரக்கு‘: இரண்டு பேர் கைது!!

18 February 2021, 1:32 pm
Liquor Seized arrest - Updatenews360
Quick Share

திருவாரூர் : ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சரக்கு வாகனத்தில் 18 சாக்கு மூட்டைகளில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 2700 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்ட காவல் சரக எல்லையான பேரளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ஜெயகாந்தன், மகேந்திரன் ஆகிய இருவர் கடத்தி வந்த சுமார் 1.50 லட்சம் மதிப்புள்ள,180.மி.லி அளவுள்ள 2700 மது பாட்டில்களையும் ,கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட அவ்விருவரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

இவ் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் எம்.துரை பாராட்டு தெரிவித்தார்.

Views: - 1

0

0

1 thought on “திருவாரூருக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி ‘சரக்கு‘: இரண்டு பேர் கைது!!

Comments are closed.