மத்திய பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணித்துள்ளது: நாராயணசாமி குற்றச்சாட்டு

2 February 2021, 4:54 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணித்துள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, உலகிலேயே எந்த நாட்டிலேயும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பனவீக்கம் உள்ளது என்றும், மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுதொழில், நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்றும், எதிர் நாடாக உள்ள சீனாவில் 200 பில்லியன் டாலர் ரானுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஒதுக்கிய அதோ நிதியை தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றார்.

மேலும் வங்கிகளை தனியார் மையமாக்குவதால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது என்பதால் வங்கிகளை தனியார் மையமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில், எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும்,

பாஜக தேசிய தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வந்த போது அதிக நிதி அளிப்போம், மூடப்பட்டுள்ள அலைகள், ரேஷன் கடைகளை திறப்போம் என்று அறிவித்திருந்தார். ஆனால் பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு அறிவிப்பு இருக்கும் என நினைத்து இருந்த நிலையில், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது மத்தியில் உள்ள பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணித்துள்ளதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 1

0

0