ஜிப்மர் மருத்துவர்கள் நான்காவது நாளாக மனித சங்கிலி போராட்டம்

5 September 2020, 7:12 pm
Quick Share

புதுச்சேரி: பணியின் போது மருத்துவரை தாக்கிய ஆண் செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து ஜிப்மர் மருத்துவர்கள் நான்காவது நாளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் கடந்த 31ம் தேதி பணியில் இருந்த மருத்துவர் அதீதனை ஆண் செவிலியர் செந்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் மருத்துவரை தாக்கிய செவிலியர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பணி பாதுகாப்பு வழங்க கோரியும், ஜிப்மர் மருத்துவர்கள் கடந்த 3 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் செந்தில் மீது தன்வந்திரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்தும், இனி வரும் காலங்களில் மருத்துவ பணியில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தியும் 100 க்கும் மேற்ப்பட்ட ஜிப்மர் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஜிப்மர் வளாகத்திற்குல் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இப்போராட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து கண்டன் கோஷங்களை எழுப்பினர்.

Views: - 0

0

0