எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தல் : தஞ்சை ரயில்வே போலீசார் அதிரடி ஆக்ஷன்!!

Author: kavin kumar
9 November 2021, 5:01 pm
Thanjai Rail Alcohol - Updatenews360
Quick Share

தஞ்சை : காரைக்கால் எர்ணாகுளம் விரைவு வண்டியில் சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 165 மது பாட்டில்களை தஞ்சை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயிலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றனவா, வெடிமருந்து கடத்தல் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது குறித்து தஞ்சை ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை ரயில்வே போலீசார் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலை ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 165 எண்ணிக்கையில் 20 ஆயிரம் மதிப்புள்ள எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் ரயிலில் எடுத்து வர அனுமதி இல்லாத நிலையில் சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டதையடுத்து அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 443

0

0