சபாநாயகர் செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளது:மருத்துவமனை அறிக்கை

Author: Udhayakumar Raman
31 August 2021, 11:17 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 26ம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள வந்த சபாநாயகர் செல்வத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலை நெஞ்சு வலி காரணமாகப் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

Views: - 180

0

0