அடுக்கு மாடி குடியிருப்பில் திருட்டு… குற்றவாளியை கைது செய்து நகைகள் பறிமுதல்…

2 August 2020, 4:26 pm
Quick Share

புதுச்சேரி: அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுப்பட்ட சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.

புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரெஜினாபேகம். இவர் வேலை விஷயமாக கடந்த மே மாதம் டெல்லி சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கடந்த 21 ஆம் தேதி ரெஜினாபேகம் வீட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளார். அப்போது பூட்டிய வீட்டின் உள்ளே சத்தம் கேட்டதால் குடியிருப்பு காவலாளி சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்து யாரோ ஒருவர் ஒடி உள்ளார். இது குறித்து காவலாளி பெரியகடை காவல் நிலையத்திற்கும், டெல்லியில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர் பெரிய ஆனி பிடிங்கி ராடு மூலமாக வீட்டின் கதவை நெம்பி உள்ளே சென்று நகைகளை திருடி இருந்தது முதற் கட்ட விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதே போல் அடுத்த இரு தினங்களில் ஊர் திரும்பிய வீட்டின் உரிமையாளர் தன் பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் 1.5 லடசம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றுள்ளதாக அளித்த புகாரை அடுத்து
பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபரை கைரேகை நிபுணர்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தனிபடை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் விட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுப்பட்ட சென்னையை சேர்ந்த மார்கெட் சுரேஷை போலீசார் கைது விசாரணை நடத்தினர். இதில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி புழல் சிறையிலிருந்து பினையில் வெளியே வந்து புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு வந்து தாங்கியுள்ளார் என்றும், அங்கே இருந்து தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ருபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் வீட்டை உடைக்க பயன்படுத்திய பெரிய ஆனி பிடிங்கி ராடு ஆகியவையை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரை புதுச்சேரி அரசு முருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுள்ளதாகவும், பரிசோதனை முடிவு வந்த பிறகே இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரணை நட்த்தப்படும் என்று கிழக்கு காவல் கண்காணிப்பாளர் மாறன் தெரிவித்துள்ளார்.

Views: - 4

0

0