பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பல கோடி மோசடி: சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

10 September 2020, 2:19 pm
Madurai HC- updatenews360
Quick Share

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பல கோடி மோசடி சிபிஐ விசாரணை உத்தரவிட கோரி வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பழநி லட்சுமிபுரம் ஓய்வு பெற்ற பேராசிரியர் கனகராஜூ உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கோவை, திண்டுக்கல், பழனி ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் ஒருவர் ( சரவணன் ). பல்வேறு கிளைகளில் பல பெயர்களில் ரூ .58 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு ஈடாக வெறும் ரூ .5 கோடி மட்டுமே பிணையம் பெறப்பட்டுள்ளது. உரிய பிணையம் இன்றி, வங்கி மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின் பற்றாமல் முற்றிலும் விதிமுறைகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளது .

இதற்கு வங்கியின் சில அலுவலர்கள் உடந்தை. இந்த முறைகேடு வங்கி நிர்வாகம் மற்றும் சி.பி.ஐ. க்கு புகார் அனுப்பினேன். இது வரையில் எந்த நடவடிக்கை இல்லை. எனவே இந்த பல கோடி பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்தமனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது, விசாரணை செய்த குறித்து டெல்லி சி.பி.ஐ. இயக்குனர், சென்னை சி.பி.ஐ. பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 23 க்கு ஒத்திவைத்தார் .

Views: - 6

0

0