தவசிலிங்கம் சுவாமி கோவிலில் பூர்த்தி பூரண மண்டல பூஜை

Author: Udayaraman
15 October 2020, 7:10 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அமைந்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களின் குலதெய்வ கோவிலான தவசிலிங்கம் சுவாமி கோவிலில் பூர்த்தி பூரண மண்டல பூஜை நடைபெற்றது.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீதவசிலிங்கசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குலத தெய்வ கோவிலாக உள்ளது இந்த கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் மஹாகும்பாபிஷேக நிறைவு நாளான இன்று பூர்த்தி பூரண மண்டல பூஜை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க தவசி லிங்கசாமிக்கு 108 சங்கு அபிஷேகம் 108 கலச அபிஷேகங்கள் திரவியம் மங்கள அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சன்னதியின் அருகே உள்ள சிவபெருமான்,கன்னிமூல விநாயகர்,முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 36

0

0