புதுச்சேரியில் ராகு கேது பெயர்ச்சி விழா: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

1 September 2020, 11:03 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர ராகு கேது சிலைக்கு நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சக ராசிக்கும் பிரவேசிக்கும் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உலகிலையே மிக உயரமான 12 அடி ராகு கேது சிலை அமைந்துள்ள புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ராகு கேதுவுக்கு 108 லிட்டர் பால், மஞ்சள், உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Views: - 8

0

0