ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் போராட்டம்

19 September 2020, 11:36 pm
Quick Share

கோவை: ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, ரயில்களை தனியார் இயக்குவது, பராமரிப்பது, பயணச்சீட்டு உள்ளிட்டவற்றை தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில்களை தனியாருக்கு திறந்து விடுவது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் வீடுகளில் மின் விளக்க அனைத்து டார்ச் லைட் அடித்து போராட்டம் நடத்தினர்.

Views: - 6

0

0