வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை

Author: Udhayakumar Raman
28 November 2021, 4:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதி-1, பகுதி-2, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அருகில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதாலும், துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் இந்தப் பகுதி வழியாக செல்வதாலும் மழைநீர் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றன.

மேலும் தேங்கி நிற்கும் மழை நீரில் இருந்த பாம்பு தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்த பருவமழை காலத்தில் இது போன்று மூன்று முறைக்கு மேல் இந்தப் பகுதிகள் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து தாக அப்போது மக்கள் கூறுகின்றனர்.மேலும் இந்த பகுதியில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததாலும் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத ஆண்டுதோறும் இதுபோன்ற பாதிப்புகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 135

0

0