உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி: தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

Author: Udhayakumar Raman
1 September 2021, 6:53 pm
Quick Share

தூத்துக்குடி:  உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக்கூட்டத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உப்பள தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும் சக தொழிலாளர்களுக்கு, இனிப்பு வழங்கியும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான மழைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு  தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த ஆண்டிலேயே நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. உப்பளத் தொழிலாளர்களின் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்த தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு உப்பள தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

Views: - 54

0

0