ரயில் நிலையம் மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

Author: Udhayakumar Raman
5 December 2021, 8:28 pm
Quick Share

கோவை: கோவை ரயில் நிலையம் மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

கோவையில் காந்திபுரம், ரயில் நிலையம், அவினாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக ரயில் நிலைய மேம்பாலம் அடியில் மழை நீர் அதிகளவு தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் ஒரு ஆட்டோவும் சிக்கி உள்ளதால் அங்கு உள்ளவர்கள் அந்த ஆட்டோவை உடனடியாக மீட்டனர் மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ரயில்நிலையம் மேம்பாலத்திற்கு அடியில் உள்ள மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 83

0

0