தலைமை செயலரானார் ராஜிவ் ரஞ்சன்: தமிழக அரசு அறிவிப்பு..!!

31 January 2021, 6:05 pm
Quick Share

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகத்தின், பதவி நீட்டிப்பு காலம் இன்றுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு பணியில் இருந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து, இவர் தமிழகத்தின் புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்தது. இவர், மத்திய மீன்வளம் கால்நடை, பால்வளத்துறை செயலராக பதவி வகித்துள்ளார்.

ராஜிவ் ரஞ்சன் ஏற்கனவே முதல்வர் பொறுப்பில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை செயலராக, நீண்ட காலம் பணியாற்றியவர். இவர் வரும் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றுடன் ஓய்வு பெறவுள்ள தலைமை செயலர் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சம்பளமாக ரூ.2.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 21

0

0