வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பேரணி: போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

29 January 2021, 2:44 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அறவழிப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். அப்போது பெருந்திரளாக கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார் தடுப்புக்காக வைத்திருந்த பேரிகார்டுகளை தகர்த் தெரிந்தனர்.

மேலும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை தாக்கி கண்ணாடிகளை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்பு போராட்டக்காரர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்தெரிந்து பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்பு மாவட்ட ஆட்சியரிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்தனர்.இதனால் மயிலாடுதுறையின் நகரின் முக்கிய வீதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 1

0

0