பட்டாசு வெடிக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி: காங்கிரஸ்-போலீசார் இடையே தள்ளு முள்ளு

6 November 2020, 4:52 pm
Quick Share

விருதுநகர்: வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பழனியாண்டவர்புரம் காலனியில் இருந்து பேரணியாக சென்று காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்றனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டடத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Views: - 14

0

0