பிரதமருக்கு தலையாட்டும் பொம்மையாக செயல்படும் ரங்கசாமி: நாராயணசாமி குற்றச்சாட்டு

Author: Udhayakumar Raman
25 September 2021, 7:32 pm
Pondy Narayanasamy - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் அரசு மத்திய பா.ஜ.க அரசுக்கு வால் பிடிக்கும் அரசாகவும், அடிமையாகவும் பிரதமர் மோடிக்கு தலையாட்டும் பொம்மையாகவும் செயல்பட்டு வருவதால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரியில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்திருந்தனர், ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் அறிவித்திருந்தார்.
அதன்படி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி வைத்து மத்திய அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு மூன்று வேளான் சட்டத்தை நிறைவேற்றி விவசாயத்தை கார்பரேட்க்கு விற்பனை செய்யும் வேலை பார்த்து வருவதாகவும், தொடர்ந்து விலை வாசி உயர்வு, 20 கோடி பேர்க்கு வேலை இல்லா தின்டாட்டம், கொரோனா கால கட்டங்களில் மத்திய மோடி அரசு உரிய நடவடிக்கை ஏடுக்காத காரணத்தினால் பல லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும், பெட்ரோல், கேஸ் விலை உயர்வால் மக்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் இதை குறித்து பிரதமர் மோடி அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனை எல்லாம் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இந்த கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர்,

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையில் நடைபெற்று வரும் அரசு பா.ஜ.க வுக்கு வால் பிடிக்கும் அரசாகவும், அடிமையாகவும் செயல்பட்டு வருவதாகவும், பிரதமர் மோடிக்கு தலையாட்டி பொம்மையாக இந்த ஆட்சி இருக்கிறது, என்றும் இதனால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார், தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற 27 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

Views: - 166

0

0