வ.உ.சியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை

Author: Udhayakumar Raman
5 September 2021, 1:57 pm
Quick Share

புதுச்சேரி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

கப்பலோட்டிய தமிழனும் விடுதலைபோராட்ட வீரரூமான வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சட்டபேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லஷ்மிநாரயணன், சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், அசோக்பாபு, ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பல்வேனு கட்சி மற்றும் அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Views: - 187

0

0