வேனில் கடத்தி வரப்பட்ட 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

3 March 2021, 3:54 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 2.50 டன் ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து, வாகன ஓட்டுனர் உட்பட 2 பேர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு சிலர் ரேசன் அரிசி கடத்தி வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஆமத்தூர் அருகே ஆய்வாளர் பிரியா, சார்பு ஆய்வாளர். அசோக், காவலர்கள் ரஞ்சன் குமார், சந்திரன் ஆகியோர் இன்று காலை வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, வேனில் வந்த விருதுநகர் அல்லம்பட்டி சீனிவாசன், சங்கரவேல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 50 முட்டைகளில் இருந்த 2.50 டன் ரேஷன் அரிசி யையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Views: - 5

0

0