தரமற்ற ரேஷன் அரிசியை வழங்கியதால் மக்கள் கொந்தளிப்பு: வாங்கிய அரிசியை கீழே கொட்டியதால் பரபரப்பு

Author: Udhayakumar Raman
29 June 2021, 1:29 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கருப்படைதட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மஞ்சள் கலரில் மிகவும் தரமற்ற முறையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர். சிலர் அந்த அரிசியை வாங்கி கீழே கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிர்த்த மக்கள் , ரேஷன் கடையில் நல்ல பொருட்களை அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் முக கவசம் இல்லாமலும், பாதுகாப்பு இடைவெளியில்லாமலும், ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் நெருக்கத்தில் நின்று கொண்டும் அடித்து பிடித்து ரேஷன் அரிசியை வாங்கினார்கள். ஒருவித நெடியுடன் வாசனை வந்ததால் அரிசியை கையில் எடுத்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அரிசியில் இருந்து துர்நாற்றமும், மஞ்சள் கலரிலும் ,சுகாதாரமற்ற, தரமற்ற முறையில் ரேஷன் அரிசி இருந்ததால் ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்தனர்.

கடையின் விற்பனையாளர் அரசாங்கம் கொடுப்பதைதான் நாங்கள் கொடுக்க முடியும், வேண்டும் என்றால் வாங்குங்கள் இல்லாவிட்டால் இங்கிருந்து பிரச்சனை செய்யாமல் கிளம்புங்கள் என முகத்தில் அடித்தாற்போல் கூறினார். பலர் அந்த அரிசியை வாங்கி அருகே உள்ள கால்வாயில் கொட்ட முயற்சித்தனர். அது தவறான செயல் என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கூறியதன் காரணமாக, ” இந்த அரிசியை ஆடு மாடு கோழி கூட உண்ணாது. நாங்கள் எப்படி உண்ண முடியும், ஊரடங்கு காலத்தில் கூட மனிதாபிமானம் இல்லாமல் இப்படி தரமற்ற அரிசியை வழங்குகின்றார்களே என புலம்பிக்கொண்டே அந்த தரமற்ற அரிசியை வாங்கி சென்றனர்.

Views: - 146

0

0