போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்

5 September 2020, 10:53 pm
Quick Share

திருவாரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூரில் அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக உணவுத் துறை அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- அதிமுக கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் தான் முடிவு எடுக்க முடியும். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச் ராஜா சொல்லும் கருத்துக்கு அதிமுகவை சேர்ந்த நாங்கள் கருத்து சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் முடிவு எடுப்பார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு சில ரேஷன் கடை ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையான கோரிக்கைகளை தேவையான நேரங்களில் நிறைவேற்றித் தரும் இலகுவான மனம் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எனவே ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றார் மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப்பொருட்களை சீராக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Views: - 6

0

0