சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 வழக்கு பதிவு

17 July 2021, 9:24 pm
Quick Share

கோவை: கோவை பந்தயசாலை சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணின் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரித்து, மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உறவினரான அபிநயாவின் குடும்ப பிரச்சினை தொடர்பாக 2017 ம் ஆண்டு பார்த்திபன் விசாரணை நடத்தியதும் அப்போதிருத்து இருவரும் நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது. அபிநயாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்த பார்த்திபன் சமீப காலமாக பணம் கேட்டு அபிநயாவை மிரட்டி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 15 ம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளர் அபிநயாவை தாக்கி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரித்துள்ளார்.இந்நிலையில் தன்னை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அபிநயா சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் குறித்து சிங்காநல்லூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 121

0

0