மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கோவில் குளத்தில் சடலமாக மீட்பு

13 August 2020, 9:32 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிபூண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டி கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த பாதிரிவேடு கிராமத்திலுள்ள பழமை வாய்ந்த அரகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் நடுவே உள்ள குளத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் விசாரணையில் அந்த மூதாட்டி அதே பகுதியை சார்ந்த சித்தம்மாள் 60 என்பதும், அவர் கடந்த பத்து வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மனநலம் பாதிக்க பட்டதால் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0