வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு: 3பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

1 March 2021, 3:08 pm
Quick Share

அரியலூர்: வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி பெயர் ஜெசிந்தாமேரி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ஊருக்கு அருகில் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்துள்ளார். வயதுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கடந்த 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருமானூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் சவரிமுத்து குத்தகைக்கு ஓட்டிய வயலுக்கு அருகில் உள்ள முருகேசன் என்பவரது வயலில் 2சாக்கு மூட்டைகள் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து சேனாதிபதி கிராமத்தை சேர்ந்த முருகேசன், கணேசன், சாமிதுரை ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணை தீவிரப்படுத்திய போலீசாரிடம் முருகேசன் உண்மையை ஒத்துக்கொண்டு,

சவரிமுத்துவின் உடல் கட்டி வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள் இருந்த இடத்தை அடையாளம் காட்டியதை அடுத்து போலீசார் வருவாய்த்துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், தனது வயலில் காட்டு பன்றிகளால் பெருமளவில் சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மின் வேலி அமைத்து இருந்தது தெரியாமல் அவ்வழியாக வந்த சவரிமுத்து மின்கம்பியில் மாட்டி உயிரிழந்தார்.

இதனால் தன் மீது வழக்கு தொடரப்படும் பயந்த சவரிமுத்துவின் உடலை வைத்திருந்த முருகேசன் துர்நாற்றம் வீசியதை அடுத்து அருகில் உள்ள கரும்பு வயலில் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் போட்டு விட்டதாக முருகேசன் வாக்குமூலம் கொடுத்ததாக தெரியவருகிறது .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 22

0

0