தூக்கி வீசப்படும் மது பாட்டில்களை எடுத்து விற்பனை செய்பவர் தூக்கில் பிணமாக மீட்பு

29 August 2020, 9:37 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தெருவில் தூக்கி வீசப்படும் மது பாட்டில்களை எடுத்து விற்பனை செய்பவர் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள எரியூட்டு மைதானத்தில் ஆண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் கிடைத்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் அந்த நபர் அப்பகுதியில் தூக்கி வீசப்படும் மது பாட்டில்களை எடுத்து விற்பனை செய்பவர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.