கிணற்றில் சடலமாக இளைஞரின் உடல் மீட்பு: ஆன்லைனில் பணம் செலுத்தி இழந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு…

17 August 2020, 6:51 pm
Quick Share

விருதுநகர்: சூலக்கரையில் அருகே கிணற்றில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணற்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது உடலை கைப்பற்றி சூலக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இறந்தவர் பேச்சிமுத்து (24) சூலக்கரையை சேர்ந்தவர். இவர் ஆன்லைனில் பணம் செலுத்தி பணத்தை இழந்ததால் கடந்த சில தினங்களாக மனவருத்தத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினர் இவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்றவர் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இவரை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அவருடைய சடலம் கிணற்றில் மிதப்பதாக தெரிய வந்தது.

உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இவர் ஆன்லைன்னில் பணம் கட்டி இழந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து வழக்கு பதிவு செய்து சூலக்கரை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து ஒருவர் உயிரிழந்திருப்பது சூலக்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 25

0

0