புழல் நீர்தேக்கத்தில் ரத்தகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு…
14 August 2020, 9:56 pmதிருவள்ளூர்: புழல் நீர்தேக்கத்தில் 60வயது மதிக்கதக்க ரத்தகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு தற்கொலையா?கொலையாஎன செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க நபர் ஏரிக்குள் தலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும், புழல் நீர்த்தேக்கத்தில் பக்கவாட்டு சுவற்றில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கக் கூடும் என்றும் இது கொலையா தற்கொலையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.