அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: கொலையா..?? தற்கொலையா…??? என விசாரணை

Author: Udhayakumar Raman
26 June 2021, 5:58 pm
Quick Share

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலீசார் கொலையா தற்கொலையா விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் பெங்களூர் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகே உள்ள கோட்டை அகழியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மிதந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக இருந்தவர் நீல நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் தெரியவில்லை. கோட்டை அகழியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து வீசினார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 473

0

0