போராட்ட காலங்களில் நடந்துகொள்ளும் விதம் குறித்து மாநகர போலீசார் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி..

1 December 2020, 9:26 am
Quick Share

கோவை: போராட்ட காலங்களில் நடந்துகொள்ளும் விதம் குறித்து கோவை மாநகர போலீசார் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா, மேற்பார்வையில்
போராட்டக் காலங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்து போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சிகள் மாநகர பகுதிகளில் நடைபெற்றது.

கோவை மாநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன. சில நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்துவது அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகரில் நடைபெற்றது.


மாநகர எல்லைக்கு உட்பட்ட 15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட அவினாசி ரோடு, அண்ணா சிலை சிக்னல், டவுன்ஹால், குனியமுத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் போலீசார் பங்கேற்றனர் போலீசார் இந்த ஒத்திகையின் நிகழ்ச்சியை பார்த்த பொதுமக்கள் நிஜத்தில் போராட்டம் நடப்பதாக கருதி அங்கிருந்து வேகமாக நகர்ந்து இதனால் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 18

0

0