பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியீடு

Author: Udayaraman
9 January 2021, 9:47 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி காவல் நிலைய பெண் காவலர் பாடிய பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வெளியிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை பெண் காவலர் சசிகலா பாடிய (குட்டிமா) பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு ஆடியோவை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வெளியிட்டார். சமுதாய சிந்தனையோடு கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திடும் நோக்கத்தோடுதொடர்ந்து, இனிமையான குரலில் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தானே எழுதி பாடல்களைப் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் பெண் காவலர் சசிகலாவுக்கும் மாவட்ட காவல் துறைக்கும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 44

0

0