திருச்சியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 2:48 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் இறுதி பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியீட்டார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள 9சட்டமன்ற தொகுதிகளுக்காக வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 11,33,020 ஆண் வாக்காளர்களும், 11,99,835 ஆண் வாக்காளர்களும்,
231மூன்றாம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 66,615 கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்.

1,000 ஆண் வாக்காளர்களுக்கு 1058 பெண் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 76.11 சதவீதம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 3.71 சதவீதம் வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 இன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டினைத் தொடர்ந்து தொடர் திருத்தப் பணியாளது தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், நீக்கம் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருப்பின் அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள் உதவி வாக்காளர் பதவி அலுவலர் அலுவலங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணங்களை சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Views: - 0

0

0