வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 2:56 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார்

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, கேவிகுப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று அனைத்து கட்சியினரின் முன்னிலையில் வெளியிட்டார். இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். இதில் கடந்த 16-11-2020 வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், திருத்தங்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போன்றவைகளுக்காக மனுக்கள் பெறப்பட்டு அவைகள் பரிசீலிக்கப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஆண் வாக்காளர்கள் 6,12,857, பெண் வாக்காளர்கள் 6,51,091, மூன்றாம் பாலினம் 140 ஆக மொத்தம் இந்த மாவட்டத்தில் மொத்தம் 12,64,088 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைகாக வைக்கபடவுள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் இம்மாவட்டத்தில் 38,234 பெண்கள் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் பெயர் சேர்க்க 15,088 படிவங்கள் பெறப்பட்டது. மேலும் 21-1-2021 முதல் சிறப்பு சுருக்க திருத்த முறை அமுல்படுத்தபடுவதால் படிவங்களை நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலரிடம் படிவங்களை அளிக்கலாம், அத்துடன் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதியதாக 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 44,264, ஆனால் தற்போது வாக்காளர்களாக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 23,800, ஆனால் இன்னமும் 22,464 புதியதாக முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்க்கப்படவுள்ளது. இவர்களை சேர்க்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதிகோரப்பட்டுள்ளது என்று கூறினார். 50 சதவிகிதம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0