குமரி பொறியியல் கல்லூரியில் சமய நல்லிணக்க கூட்டம்.! திரைப்பட இயக்குனர் அமீர் பங்கேற்பு
6 February 2021, 4:13 pmகன்னியாகுமரி: குமரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமய நல்லிணக்க கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் அமீர் பங்கேற்றார்.
குமரி மாவட்டம் லயோலா பொறியியல் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவ மாணவியர்க்கு பரிசுகளை வழங்கி சமூக நல்லிணக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் ஷாக்சி அகர்வால் கல்லூரி மாணவிகளுடன் நடனம் ஆடி நிகழ்ச்சியை தெறிக்கவிட்டார் . இதில் அய்யாவழி சமய தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் ,அகில பாரத அய்யப்பா சேவா சங்க தலைவர் ஆதிமணி ,பங்கு தந்தையர்கள் வின்சன்ட் ,பீட்டர்,செல்வராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
0