நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றம்

Author: kavin kumar
27 August 2021, 11:08 pm
Quick Share

தஞ்சை: நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்களை வருவாய்த் துறையினர் காவல் துறையினர் முன்னிலையில் புல்டோசர் கொண்டு வெடித்து அகற்றினர்

தஞ்சை மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து 22 அடி அகலத்திற்கு சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தினை தனியார் 3 பேர் ஆக்ரமித்து கட்டடம் கட்டி உள்ளனர். மேலும் நீர் வழிப்பாதையில் 9 அடி அகலத்திற்கு சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் லாரி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுத்தியது.

இதனையடுத்து அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி மனு அளித்தனர். இதனை அடுத்து இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, வருவாய் துறையினர் காவல்துறையினர் முன்னிலையில் நீர்வழி பாதையில் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டடங்களை வட்டாட்சியர் அகற்ற உத்தரவிட்டது அடுத்து வருவாய்த் துறையினர் காவல் துறையினர் முன்னிலையில் நீர்வழி பாதை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 3 கட்டடங்களை புல்டோசர் எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பு இடத்தை கைப்பற்றினர்.

Views: - 154

0

0