கிளியூர் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையோர கடைகள் அகற்றம்:அகற்ற விடாமல் பொதுமக்கள் முற்றுகை
Author: kavin kumar1 October 2021, 11:24 pm
சேலம்: ஏற்காட்டில் கிளியூர் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையோர கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் இருந்து சுமார் 3கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு அதிக அளவில் செல்வது வழக்கம். அதன் காரணமாக அங்கு உள்ள கார்பார்க்கிங் அருகில் உள்ளூர் வாசிகள் சிலர் தள்ளுவண்டி கடை மற்றும் சிரியவகை பேட்டி கடைகள் வைத்து நடத்திவந்தனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் வருவாய் துறை அதிகாரிகள் சிலர் அங்கு சென்று இந்த இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது ஆதலால் இந்த இடத்தை காலிசெய்யுமாறு கூறி விட்டு வந்துள்ளனர். கடைக்காரர்களும் காலிசெய்து கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது.பிறகு நேற்றும் அதிகாரிகள் சென்று தாங்களாக கடையை எடுக்கவில்லை என்றால் அரசாங்கமே அப்புறப்படுத்திவிடும் என்றும் கூறிவிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று கடை காரர்கள் கடையை எடுக்காததால் ஏற்காடு வட்டாட்சியார் ரவிகுமார் தலைமையில் அங்கு சென்ற அரசு அதிகாரிகள்மற்றும் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கடையை போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்த சென்றனர். அப்போது கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கடைகளை அகற்ற விடாமல் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர் .மேலும் சுமார் 3மணி நேரம் கடைகளை அகற்ற விடாமல் வாக்குவாதம் செய்தும் ,ஜே சி பி வாகனத்தின் முன் அமர்த்தும் தடுத்து நிறுத்தினர் . மேலும் அவர்கள் கடையை அகற்றிக்கொள்ள 10நாள் அவகாசம் கேட்டனர் . அதற்கு அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் கடையின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர் . மற்றும் சில கடைக்காரர்கள் அகற்றாததால் அதிகாரிகளே ஜேசிபி இயந்திரத்தை வைத்து அகற்றினர்.
0
0