கோவையில் 1975ல் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம் மீண்டும் புதுப்பிப்பு..!

Author: kavin kumar
27 August 2021, 9:03 pm
Quick Share

கோவை: கோவையில் கடந்த 1975ல் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியூசியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்காக கடந்த 1975 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் பெட்போர்ட் (TNE6000 Hindusthan Bedford) என்ற வாகனம் வாங்கப்பட்டது. கடந்த 1974ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த வாகனத்தை கோவை மாவட்ட போலீசார் 1975 முதல் 1987ஆம் ஆண்டு வரை பயன்படுத்தினர்.இந்த நிலையில், பழுதடைந்த வாகனம் பழுது பாக்காமல், பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.இதை அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அந்த வாகனத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அதன் பேரில், அந்த வாகனம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த வாகனம் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

Views: - 200

0

0