கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல் தவறானது… இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பேட்டி…

4 August 2020, 8:38 pm
Quick Share

ஈரோடு: தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக சமூகவலைதளங்களில் வரும் தகவல் தவறானது எனவும் ஓரிரு நாட்களில் முழு விபரங்களும் தெரிவிக்கப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் மருத்துவர் ராஜா தெரிவித்தார்

ஈரோட்டில் இன்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் மருத்துவர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா எதிர்த்து அனைவரும் போராடி வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் பாகுபாடில்லாமல் சேவை செய்து வருவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் குழுவால் இறந்துள்ளதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், இதுகுறித்து இன்னும் இரு தினங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மருத்துவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

மேலும் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா சிகிச்சைக்காக அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வரவேற்கத்தக்கதாகும், தனியார் மையங்களில் இந்த சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Views: - 31

0

0